சித்தாண்டியில், சமுர்த்தி ஜயவிமன வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.......
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஜயவிமன வீடமைப்பு வேலைத்திட்ட நிதி பங்களிப்பிலும், கனடா ஐயப்பன் இல்ல பக்தர்களின் நிதிப் பங்களிப்புடனும் நிர்மாணிக்கப்பட்ட வீடு, பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
முன்னைய வீடு
அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜயராஜா தலைமையில் இடம்பெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில், அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக கணக்காளர் ஏ.டிலானி, ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.இராசலிங்கம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் K.கலாதேவன், சமுர்த்தி வங்கி முகாமையாளர் சுதர்ஷனி ஜெகன் ஜீவராஜ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் S.தவநீதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
தற்போதைய வீடு
இதன் போதுவீட்டு ஆவணமும், தளபாடங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment