போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் புதிய பிரதேசசெயலாளர் பதவியேற்பு!

 போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தில் புதிய பிரதேசசெயலாளர் பதவியேற்பு!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் (03) ஆம் திகதி புதிய பிரதேச செயலாளராக சோ.ரங்கநாதன் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மற்றும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று உதவிச்செயலாளர் திட்டமிடல் பணிப்பாளர், கலாசார உத்தியோகஸ்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு புதிய செயலாளரை வரவேற்றனர்.



Comments