திருகோணமலை சீனக்குடாவில் விமான விபத்து: இரண்டு விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு.........
திருகோணமலை, சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த PT6 ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) மு.ப.11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணையை நடத்த விசேட விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த விமானத்தில் பயணித்த பயிற்சியாளரும், பயிற்சி விமானியான பெஷான் வர்ணசூரிய எனும் இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Comments
Post a Comment