அறபா கல்லூரி வெற்றி.....
2023ம் ஆண்டுக்கான இலங்கை பாடசாலை மட்ட கிரிக்கெட் Div-III போட்டியில் அறபா கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியை பதிவிட்டுக் கொண்டு அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
பொலநறுவ சேவமுக்தா கந்தவுறு மகா வித்தியாலய மைதானத்தில் ஏறாவூர் அறபா கல்லூரிக்கும் சேவமுக்தா கந்தவுறு மகா வித்தியாலயத்துமான 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் அறபா கல்லூரி 36.1 ஓவர்களில் 179 ஓட்டங்களை சகல விக்கெட்டுக்களையும் இழந்து பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஏறாவூர் அறபா கல்லூரி சார்பாக AL.நகையான் 55 ஓட்டங்களையும், SM.ஹசாம் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சேவமுக்தா கந்தவுறு மகா வித்தியாலயம சார்பாக அகித சாம்சரா 17 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், தெய்வீமன இம்மானுவல் 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த சேவமுக்தா கந்தவுறு மகா வித்தியாலயம் 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரானுக ஸ்ரீதேகன் மற்றும் திவிது நடோனித் தலா 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஏறாவூர் அறபா கல்லூரி சார்பாக அசிட் அகமட் 14 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், அபித் ஹாசன் 12 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தனர்.
இதன் அடிப்படையில் ஏறாவூர் அறபா கல்லூரி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
Comments
Post a Comment