மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி........

 மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி........

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்டோருக்கான  இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நடாத்தும்  Div-III க்கான போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லுரிக்கும், அனுராதபுரம் தேசிய பாடசாலைக்கும் இடையில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரி அனுராதபுர தேசிய பாடசாலையை துடுப்பெடுத்தாட பணித்தது.

 துடுப்பெடுத்தாட களம் நுழைந்த அனுராதபுர தேசிய பாடசாலை 34 ஓவர்களில் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் மெதடிஸ்த மத்திய கல்லூரி சார்பாக லதுர்சன் 21 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், திரிசோ 21 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், அபூர்வன் 26 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டினையும் கைப்பற்றி இருந்தனர்.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆட்ட நேர முடிவில் 32 ஓவர்களை எதிர்கொண்டு 04 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது, இதில் அகிலேஸ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், அபூர்வன்  ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 இதன் அடிப்படையில் முதல் இனிங்ஸ் வெற்றியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பெற்றுக் கொண்டதுடன் நான்காம் சுற்றுக்கும் தெரிவாகியுள்ளது.





Comments