தேனால் வந்த சோதனை.......

 தேனால் வந்த சோதனை.......

கலப்படமான தேனை பொது மக்களுக்கு விற்பனை செய்த ஒருவர் மீது மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் உரியவரிடமிருந்து கலப்படமான தேனையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் நடந்தேறும் போது வீதியினால் பகிரங்கமாக சிகரெட் புகைத்துக் கொண்டு சென்ற ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று (19) காத்தான்குடி புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக பொது மக்களுக்கு சுத்தமான தேன் எனக் கூறி கலப்படமான தேனை விற்பனை செய்யப்படுவதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே, காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன் போது கலப்படத்தை உறுதிப்படுத்திய சுகாதார அதிகாரிகள், தேனை அவ்விடத்தில் அழித்ததோடு, விற்பனை செய்தவர் மீது வழக்கும் பதிவு செய்தனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீனின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ரஹ்மத்துல்லாஹ்வினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இச்சம்பவம் நடந்தேறும் போது வீதியினால் பகிரங்கமாக சிகரெட் புகைத்துக் கொண்டு சென்ற ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments