பெண் சமுர்த்தி முகாமையாளர் நசுங்கிப் பலி.............

 பெண் சமுர்த்தி முகாமையாளர் நசுங்கிப் பலி.......

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில்  கோப்பாய் தெற்கைச் சேர்ந்த நவீந்திரன் கௌரிமலர் (52 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சந்தி சமிக்ஜை விளக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கணவனுடன் பயணித்த பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.  

கணவனும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சமிக்ஜை விளக்கு எ்ச்சரிக்கையை மீறி டிப்பர் சென்ற போதே விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றாா்கள். உயிரிழந்தவர் கோப்பாய் பிரதேச செயலகதில் சிறுப்பிட்டிப் பகுதி சமுர்த்தி முகாமையாளர் என தெரியவருகின்றது.


Comments