மட்டக்களப்பில் பறங்கிய சமுதாயத்தின் கலாசார நிகழ்வு .....
மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் V.வாசுதேவன் வழிகாட்டுதலின் கீழ் செயலக கலாசார உத்தியோகத்தர் வளர்மதி ராஜ் ஏற்பாடு செய்த பறங்கியர் கலாசார நிகழ்வு மட்டக்களப்பு அருணோதயா பாடசாலை மைதானத்தில் (19) நடைபெற்றது.
இதன்போது பேகர் போக்ஸ் எனும் பறங்கியர் கலாசார மன்றத்தினால் பறங்கியர் சமுதாயத்தின் கலை, கலாசார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கப்ரிஞ்சா, லாஞ்சஸ் நடனம்,பறங்கியர் பாடல் போன்றன அரங்கேற்றபட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் மலர்ச்செல்வனும், பறங்கியர் மன்ற இசைக் குழு பொறுப்பாளர் நியூட்டன் செலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச செயலகத்துடன் இணைந்து கலை மன்றங்கள் தங்கள் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தும் வேலைத்திட்டமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment