காத்தான்குடியில் விழிப்பூட்டல் செயலமர்வு.........
மட்டக்களப்பு காத்தான்குடியில் அசுவெஸ்ம மற்றும் சமுர்த்தி திட்டங்கள் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு, இன்று (04) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறீதரின் தலைமையில் விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் A.M.அலி அக்பர், அசுவெஸ்ம மற்றும் சமுர்த்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கி கூறியதுடன், சமுர்த்தி அபிருத்தி திணைக்களத்தின் தூர நோக்கு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment