அஸ்வெசும திட்ட அறிமுகத்தின் பின்னர் சமுர்த்தித் திட்டத்தின் புதிய நோக்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வாழைச்சேனையில்...
அஸ்வெசும திட்ட அறிமுகத்தின் பின்னர் சமுர்த்தித் திட்டத்தின் புதிய நோக்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வாழைச்சேனையில்...
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் பிறைந்துறைச் சேனை 206/C கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களுக்கான அஸ்வெசும திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் சமுர்த்தி திட்டத்தின் புதிய நோக்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (21) பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் ஏற்பாட்டில் பிறைந்துறைச் சேனை சாதுலியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக எஸ்.ஏ.எம்.பசீர் தலைமை முகாமையாளர் கலந்து கொண்டார். அஸ்வெசும திட்டம் குறித்த விளக்கம், அதனை நடைமுறைப்படுத்தும் முறை, இத்திட்டத்தில் பயனாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதமும் அவர்களுக்கான கொடுப்பனவுத் தொகைகள், ஏலவே செயற்பாட்டிலுள்ள சமுர்த்தி திட்டத்தின் எதிர்கால நிலைப்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை வளவாளர் வழங்கினார்.
இதன்போது சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் பங்கேற்றதுடன், கிழக்கு மாகாண சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தெரிவான எம்.எஸ்.அஸீஸிற்கு சமூக அடிப்படை நிருவாக உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment