கமநல அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாண மாவட்ட கிறிக்கட் தொடரில் மட்டக்களப்பு அம்பாறை அணியும் சம்பியனாகின.....
கமநல அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாண மாவட்ட கிறிக்கட் தொடரில் மட்டக்களப்பு அம்பாறை அணியும் சம்பியனாகின.....
கமநல அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான கிறிக்கட் தொடரில் ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு அணியும், பெண்கள் பிரிவில் அம்பாறை அணியும் சம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டன.
இலங்கையில் முதல் தடவையாக கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்தும் கிறிக்கட் தொடரின் கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டி (17) தினம் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் மு.ஜெகன்நாத் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்த வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களங்களை உள்ளீர்த்து ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் திருகோணமலை, மட்டக்களப்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தியதில் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள அணி 5 விக்கட்களால் அபார வெற்றியை பதிவு செய்து சம்பியனானதுடன், மகளீர் பிரிவில் இறுதிப்போட்டியில் அம்பாறை, திருகோணமலை அணிகள் பலப்பரீட்சை நடத்தி இருந்த நிலையில் அம்பாறை அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.
இச் சுற்றுத்தொடரில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர்களாலும் உதவி ஆணையாளர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.
இச் சுற்றுப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சம்பியனாகிய அணிகள் கமநல அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியில் நடத்தவுள்ள கிறிக்கட் தொடரில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment