மட்டக்களப்பில் சிறுவர்கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு..........

 மட்டக்களப்பில் சிறுவர்கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு..........

மட்டக்களப்பில் சிறுவர் கழக வழிப்படுத்துனர்களுக்கான செயலமர்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) இடம் பெற்றது.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ் அவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட இந் நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் உள்ள சிறுவர் கழக வழிப்படுத்துனர்கள் கலந்து கொண்டனர் .
இதன் போது எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள சிறுவர் கழகங்களை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.
போதைப்பொருள், மதுசாரம் என்பவற்றின் பாதிப்பை பிள்ளைகள் மத்தியில் எவ்வாறு தெளிவு படுத்தவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுகள் இதன் போது போதைப்பொருள் முற்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் அவர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந் நிகழ்வில் புனித மிக்கேல் கல்லூரியின் சாரண மாணவர் மேரிஸ்வரசர்மா அவர்களால் போதைப் பொருள் பாவணையினால் ற்படும் பாதிப்புக்கள் தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர் எம்.ரிழா, மாவட்ட உளவள துணை உத்தியோகத்தர் நரசிம்மன் ஜனாத்தனி, மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்


Comments