தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைப்பு............
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
தொழிற் பயிற்சியை நிறைவு செய்த 104 பயிலுனர்களுக்கான NVQ சான்றிதழ்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டதுடன், இக் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்கள் புதிய தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த முடியும்.
விசேட தொழில் நிலைசார் பயிற்சியினூடாக சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கான அதிகாரம் தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையிற்கு மாத்திரம் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment