கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நூல் வெளியீட்டு நிகழ்வு ............

 கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நூல் வெளியீட்டு நிகழ்வு ............

அஷ்ஷெய்ஹ் கலாநிதி ரவூப் ஸெய்ன் (நளீமி) எழுதிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு காத்தான்குடி பீச் வே மண்டபத்தில் (01) இடம்பெற்றது.
ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின்( IWARE) ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் பல விடயங்களை கொண்ட இந்நூல் தொடர்பாக நூலாசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் விரிவுரையாற்றினார்.
ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் (IWARE)பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் அவர்களின் சிறப்புரை இதன்போது இடம்பெற்றது.
நூல் விமர்சன உரையினை ஆய்வாளரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான எம் ஐ சுஹீறா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
மேற்படி நூலானது கலாநிதி றவூப் ஸெய்ன் (நளீமி) எழுதிய 56வது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.










Comments