வாழைச்சேனை, வடமுனைப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி...
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நாகதம்பிரான் வீதி வடமுனையைச் சேர்ந்த பெருமாள் ராமு விமலன் என்ற 69 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவர்.
நோய்வாய்பட்டிருந்த தனது தாயாருக்கு தேவையான குளிசையினை வெலிக்கந்தை கிராமத்திலுள்ள, பாமசியில் கொள்வனவு செய்து திரும்பும் போதே யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
வடமுனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படும் நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment