ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் வருடாந்த திருவிழா....

 ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின்  வருடாந்த திருவிழா....

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அமைந்துள்ள  மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழாவானது  25.08.2023 அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி  ஒன்பது நாள் திருப்பலியுடன், 02.09.2023 அன்று சனிக்கிழமை  மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில்  இருந்து காலை 5:00 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகி அன்னையின் திருத்தலத்தை வந்தடையும்.

 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 03.09.2023 அன்று  காலை 7.15  மணிக்கு திருவிழா  திருப்பலியை இலங்கைக்கான  திருத்தந்தையின் பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகையும்,   மட்டக்களப்பு மறை மாநில ஆயர்  கலாநிதி.யோசப் பொண்னையா ஆண்டகையும் இணைந்து  கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா  நிறைவடையும்.




Comments