பூநொச்சிமுனை சுனாமி வீடமைப்பு திட்ட வீதி அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பம்......
பூநொச்சிமுனை சுனாமி வீடமைப்பு திட்ட (பச்சை வீட்டு திட்ட) வீதி அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இனணத் தலைவருமான நசீர் அஹமதின் சிபார்சில் இவ்வீதி அபிவிருத்திக்கான அனுமதி வழங்கப்பட்டு நிர்மணப்பணிகள் இடம்பெற்று வந்தது.
இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினால் இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப் பட்டிருந்தன. தற்பொழுது அமைச்சர் நசீர் அஹமதின் முயற்சியால் இடைநிறுத்தப்பட்டிருந்த இவ்வீதியின் அபிவிருத்தி செய்யப்படாதிருந்த சுமார் 500 மீட்டர் நீளமான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
Comments
Post a Comment