இலங்கை கிரிக்கெட் சபையின் யூத் லீக் தொடரில் மட்டு வீரர் அஹமட் அல் நஹ்யான்......

 இலங்கை கிரிக்கெட் சபையின் யூத் லீக் தொடரில்  மட்டு வீரர் அஹமட் அல் நஹ்யான்......



இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருக்கும் 17 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான யூத் லீக் (U17 Sri Lanka Youth League) கிரிக்கெட் தொடர் திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியிருந்தது.

மொத்தம் ஐந்து அணிகள் பங்கு பெறும் இந்த கிரிக்கெட் தொடரில் நாடு பூராகவும் உள்ள பாடசாலை கிரிக்கெட் தொடர்களில்  சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் இந்த தொடரில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரினைச் சேர்ந்த அறபா வித்தியாலய மாணவரான அஹமட் அல் நஹ்யான் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். துடுப்பாட்ட சகலதுறை வீரரான அஹ்மட் நஹ்யான் இந்த தொடரில் விளையாட தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. நஹ்யான் தொடரில் கண்டி அணிக்காக ஆடவிருக்கின்றார்.

மறுமுனையில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஜயஷ்சந்திரன் அஸ்னாத் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய வீரர்களும் இந்த தொடரில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். இதில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வீரரான அஸ்னாத் சைனமன் சுழல்வீரர் என்பதோடு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ரஞ்சித்குமார் நியூட்டன் சகலதுறை வீரராக காணப்படுகின்றார். இந்த இரண்டு வீரர்களும் தொடரில் தம்புள்ளை அணியினை பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றனர்.

மறுமுனையில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி மாணவரான ஏ.ஆகாஷ் தம்புள்ளை அணியில் வட மாகாணத்தில் ஆடும் மற்றுமொருவீரராக மாறியிருக்கின்றார்.

தம்புள்ளை, கண்டி அணிகள் தவிர தொடரில் காலி, கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய அணிகளும் பங்கெடுக்கின்றன. தொடரின் போட்டிகள் கொழும்பு மூர்ஸ், SSC, புளூம்பீல்ட் மற்றும் NCC ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன.

இதில் தொடரில் முதற்கட்டமாக குழுநிலைப் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு குழுநிலைப் போட்டிகளின் புள்ளிகளுக்கு அமைய இரண்டு அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றன. தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 29ஆம் திகதி NCC மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை


திகதிபோட்டிமைதானம்போட்டிமைதானம்
       
ஒகஸ்ட் 21கண்டிகாலிமூர்ஸ்கொழும்பு வடக்குகொழும்பு தெற்குCCC
ஒகஸ்ட் 22தம்புள்ளைகொழும்பு தெற்குSSCகண்டிகொழும்பு வடக்குCCC
ஒகஸ்ட் 24கொழும்பு தெற்குகண்டிSSCகாலிதம்புள்ளைCCC
ஒகஸ்ட் 25காலிகொழும்பு வடக்குமூர்ஸ்தம்புள்ளைகண்டிபுளூம்பீல்ட்
ஒகஸ்ட் 27கொழும்பு வடக்குதம்புள்ளைமூர்ஸ்கொழும்பு தெற்குகாலிபுளூம்பீல்ட்
ஒகஸ்ட் 29இறுதிப் போட்டி – NCC

அணிக்குழாம்கள்:

தம்புள்ளை

NameSchool
Kavith SheharaSt.Joseph Vaz College, Wennappuwa
Pansilu RanasingheMaliyadeva College
Pabasara DissanayakaMaliyadeva College
Jinajith DulmikaRoyal College
Mtheesha YehenithRoyal College
Budduma SahanSt.Annes College
V AkashHeartly College
Dimath AbeysingheMaliyadeva College
Yasmin JayasundaraSt.Annes College
J R NewtonJaffna Central College
Geethika De SilvaSt.Anne’s College
Kaveesha Liyanaarachchi  – CaptainSt.Thomas College
J. AsnathST.Johns college jaffna

கண்டி

NameSchool
Januka RathnayakeSt. Anthony’s College
Dimantha MahavitharanaTrinity College
Kaveeja Gamage       (Captain)Kingswood College
Wathila UdaraTrinity College
Lakvin Abeysinghe   (V.Captain)Trinity College
Isuru PannalaDharmaraja College
Jayavi LiyanagamaTrinity College
Charuka ekanayakeSt. Anthony’s College
Senura GihanSt. Anthony’s College
Nisala AbeyrathneDharmaraja College
Dsaun WaliyangaSt. Anthony’s College
Tony GreakKotagala TMV
Ahamed NahyanArafa Vidyalayam Eravur

 கொழும்பு வடக்கு

NameSchool
Thanuja RajapakshaThurstan College
Rishma AmarasinghaSt. Josephs’ College
Kenath LiyanageSt. Joseph’s College
Samindu Maduranga (Captain)Christ King Thudalla
Raheed KareemZahira College
Denura DamsithGurukula College
Thanuja Palihawadana (VC)Thurstan College
Yenula DewthusaSt. Josephs’ College
Sethura FernandoThurstan College
Dulnith SigeraMahanama College
Kaveesha MendisAnanda College
Tharusha DilsaraGurukula College
Sarith SudeenaChrist King, Thudalla

கொழும்பு தெற்கு

NameSchool
Rivith Jayasuriya – CaptainPrince of Wales’ College
Vimath Dinsara – Vice CaptainSt. Sebastian’s College
Rusith JayawardanaRoyal college Panadura
Isuru NidharshanaMoratuwa MV
Duranka SilvaSri Sumangala College
Dineth SithuminaMoratuwa MV
Randeesha BandaranayakeDS Senanayake College
Rashan NawaranjanaTaxila Central College
Ramiru PereraRoyal College
Prince FernandoPrince of Wales’ College
Kavindu DiasS. Thomas’ College, Mount Lavinia
Ranuka MalaviarachchiRoyal College
Pasindu WimansaHoly Cross College
Deneth PriyangaSt. John’s College

காலி

NameSchool
K. Chamarindu NethsaraSt. Servatius’ College
Vishwa SupunSt. Servatius’ College
Dharshana SandeepDevapathiraja College
Dasun ChamodVidyaloka College
Pravishka Nadeen MuhendiranSt. Thomas College
Charya Paranavithana (Captain)St. Aloysius College
Viran ChamudithaSt. Servatius’ College
Nilaksha PereraSTC Bandarawela
Yuri KottigodaRichmond College
Kanishka RasangaRajapaksa CC
Malith MihirangaRevatha College
Sanju DilshanSt. Thomas College
Sadew GamageRahula College

Comments