கல்லடி உப்போடை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கும்பம் சொரிதலுடன் நிறைவு!!

 கல்லடி உப்போடை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கும்பம் சொரிதலுடன் நிறைவு!!

மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நெச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் வங்கக் கடலில் கும்பம் சொரிதலுடன் (21) நிறைவுபெற்றது.
ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த (13) திகதி திருக்கத்தவு திறத்தலுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 8 நாட்கள் சிறப்பான முறையில் உற்சவங்கள் நடைபெற்றது.
மடிப்பிச்சை எடுத்தல் மற்றும் நெல்லுக்குற்றுதல் போன்ற விசேட சடங்குகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் விநாயகர் பானை மற்றும் பள்ளையப்பானை என்பன வலம்வருதல் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு பள்ளையம் படைத்து கன்னிமார் பூசை என்பன இடம்பெற்றதுடன், அம்பாளின் திருக்கும்பங்கள் வங்கக் கடலில் சொரியப்பட்டதனைத் தொடர்ந்து ஆலய வருடாந்த உற்சவம் நிறைவுபெற்றது.
அதனைத் தொடர்ந்து நாளை வைரவர் பூசை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





Comments