மன்னார் மருதமடு அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாத் திருப்பலி இன்று......

 மன்னார் மருதமடு அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாத் திருப்பலி இன்று......

மன்னார் மருதமடு அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாத் திருப்பலி, இன்று (15) காலை 6.15 மணிக்கு, கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருத்தந்தையின் பிரதிநிதி பிறாயன் ஆண்டகை தலைமையில், மறை மாவட்ட ஆயர்கள் இணைந்து, திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

அந்தவகையில், நேற்று மாலை, நற்கருணைப் பெருவிழா இடம்பெற்றதுடன், இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மடு அன்னையின் திருவிழாவில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், பல இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்முறைஇ சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களுக்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments