காத்தான்குடியில் கலைஞர்களை ஊக்குவிக்கும் கொடுப்பனவு வழங்கல் நிகழ்வு ......
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வருடத்திற்கான உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு (07) காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்றது.
கலைஞர்களின் ஆற்றல்களை ஊக்குவிக்கும் இக் கொடுப்பனவுகள் எஸ்.எல்.நஜிமுதீன், எம்.ஐ.எம்.முஸ்தபா, ஏ.எம்.அப்துல் அஸீஸ், ஆகிய மூன்று பிரதேசக் கலைஞர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன், யோ.தனுசியா, பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment