அமிர்தகழி ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ........

 அமிர்தகழி ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ........


கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் புகழ்பெற்ற தொன்மையான ஆலயங்களில் ஒன்றான அமிர்தகழி மாமாங்கஈஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை காலை நன் பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க அமிர்தகழி மாமாங்க ஈஸ்வரர் ஆலையத்துக்கு பக்தர்கள் புடைசுழ மாமாங்கஈஸ்வரர் ஆடி அமாவாசை தீர்த்தம் நடைபெறும் நாளைய தினம் தந்தையரை இழந்தவர்கள் பிதிர்கடன் செய்யும் நிகழ்வு பிரதான நிகழ்வாக நடைபெறும்.
இறந்த ஆத்மாக்களை நினைத்து ஆண்டுதோறும் பிதிரர்களுக்கு அதிலும் ஆண்களுக்கான பிதிர் வழங்கும் சிறப்பான நாளாக ஆடி அமாவாசையும் தாய்மார்களுக்கான பிதிர் கடன்களை செய்யும் நாளாக சித்திரா பௌர்ணமியும் திகழ்கின்றது.
அந்தணர்களுக்கு தானம் வழங்கி பிதிரர்களுக்கு பின்டவைத்து தெப்பை போட்டு பிதிர்கடன்களை வழங்கி தீர்தமாடி எழைகளுக்கு தான தர்மங்களை செய்து நிறை வேற்றி எமது மூதாதயர்களை மகிழ்வித்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம்.
இவ்வாலயம் வரலாற்று புகழ்பெற்ற புராதண ஆலயம் தோற்றம் பெற்ற வரலாறாக இராமாயணத்தில் இராமன், இலங்கை அரசன் இராவணனைப் போரில் வென்று, சீதையை சிறைமீட்டு அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் ஓய்வெடுத்ததாகவும், சிவபூசை செய்து வழிபட சிவலிங்கம் ஒன்றை எடுத்துவர அனுமனை அனுப்பியதாகவும், அனுமன் சிவலிங்கம் கொண்டுவர தாமதமானதால் அங்கிருந்த மண்ணினால் இலிங்கம் செய்து சிவபூசை செய்ததாகவும், தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றி பூசைக்கு தேவையான தீர்த்தத்தினை பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. தாமதமாக வந்த அனுமனால் எடுத்து வரப்பட்ட இலிங்கத்தினை கோதண்டத்தை ஊன்றிய இடத்தில் புதைத்ததாகவும் வரலாறு. இராமபிரானால் செய்யப்பட்ட இலிங்கமே ஆலயத்தில் மூல மூர்த்தியாக உள்ளதுடன் அனுமனால் கொண்டுவரப்பட்ட இலிங்கம் புதைக்கப்பட்ட இடமே அங்கு அமைந்துள்ள தீர்த்தக் குளமுமாகும்.
அடிப்படையில் இவ்வாலயம் ஓர் சிவாலயமெனினும், இறைவனே கனவில் தோன்றி பிள்ளையாருக்கு ஆராதிக்கும்படி கட்டளையிட்டதாகவும் அப்போதிருந்து இங்கு பிள்ளையாருக்கு பூசைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆலய நிர்வாகம் கோட்டைமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும், அமிர்தகழி பகுதி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்குமே உரிமை உடையது. (1880ஆம் ஆண்டுப் பரம்பரையினர்)

Comments