சமுர்த்தி திணைக்களத்தால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிப்பு........
சமுர்த்தி திணைக்களத்தால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிப்பு........
சமுர்த்தி திணைக்களத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயல்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட கூட்டம் இன்று (30) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் குறுநிலைய பணிப்பாளர் S.A.S.விக்கிரம சிங்க, மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் I.அலியார், மாவட்ட சமுர்த்தி அலுவலக கணக்காளர் எம்.எஸ்.பசீர் மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்கள், சமுர்த்தி நிறைவேற்று குழு தலைவர்கள், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment