மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்........
மட்டக்களப்பு அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் சங்கத்தின் தலைவி வனிதா செல்லபெருமாள் தலைமையில் இடம்பெற்றது.
சர்வ மத தலைவர்கள், மாவட்ட அழகுக்கலை சங்க உறுப்பினர்களினால் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார உதவி வழங்கும் திட்டங்களை முன்னெடுத்து வரும், மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கம் 'அனைவருக்கும் செழிப்பு ' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள செயல் திட்டத்திற்கு அமைவாக, பயன் தரும் பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் டிலுசா, பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இணைந்துஇ குருதிகளைச் சேகரித்தனர்.
Comments
Post a Comment