புனித மிக்கேல் கல்லூரியில் புதிய அதிபராக அன்ரன் பெனடிக் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றார்.....

புனித மிக்கேல் கல்லூரியில் புதிய அதிபராக அன்ரன் பெனடிக் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றார்.....

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் புதிய அதிபராக அன்ரன் பெனடிக் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பின் பங்குபற்றுதலுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கணகசூரியம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் புதிய அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றறு கொண்டார்.
இதன் போது புனித மிக்கல் கல்லூரியின் நிறுவாகப் பொறுப்புகளை அதன் அதிபராக கடமை வகித்த இலங்கை கல்வி நிறுவாக சேவை உத்தியோகத்தர் ஆர்.ஜே. பிரபாகரன் புதிய அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப்பிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரி, SDEC செயலாளர், SDEC உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Comments