காத்தான்குடியில் போக்குவரத்து பொலிசார் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.....
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகனவின் ஆலோசனையில், மட்டக்களப்பு காத்தான்குடியில் போக்குவரத்து பொலிசார் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரது வழிகாட்டலில், மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சரத் தலைமையில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதி, பழைய கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி போன்ற வீதிகளில் விஷேட சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. சோதனை நடவடிக்கையின் போது 27 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment