சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு ரூபா 50 இலட்சம் பெறுமதியான பஸ் வண்டியை அன்பளிப்பு .......
எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களின் 'சக்வல-பிரபஞ்சம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி அவர்களின் முயற்சியினால் 75வது பேரூந்தினை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வு (14) திங்கட்கிழமை இடம்பெற்றது.
இப்பேரூந்து விளினையடிச் சந்தியிலிருந்து ஆரம்பித்து பழைய கல்முனை வீதி - பூ மரத்துச்சந்தியினூடாக தேசிய கல்லூரி வளாகத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் செலுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொண்டு பேரூந்தை கல்லூரி அதிபர் நஜீபா ரஹீம் அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஐ.எல்.எம். மாஹீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எல்.எம்.ஹனிபா, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா, ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment