பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2023 ம் ஆண்டுக்கான இறுதி நாள் விளையாட்டு நிகழ்வு.......

 பட்டிருப்பு கல்வி வலயத்தின் 2023 ம் ஆண்டுக்கான இறுதி நாள் விளையாட்டு நிகழ்வு.......

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகள் (14) தினம் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திரு S.சிறிதரன் அவர்களது தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் முன்பள்ளி தகவல் தொழிநுட்ப கல்வி இளைஞர் விவகாரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் H.E.M.W.D திஸாநாயக அவர்கள் கலந்து கொண்டதுடதுடன், சிறப்பு அதிதிகளாக கந்தளாய் வலயக்கல்வி பணிப்பாளர் E.G.P.I தர்மதிலக அவர்களும், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ரா.உதயகுமார் அவர்களும், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் Dr.S.M.M செயிட் உமர் மௌலானா அவர்களும் கலந்து கொண்டதுடன் இவ் விளையாட்டு இறுதிநாள் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் விளையாட்டு நிகழ்வின் குழு விளையாட்டுக்களின் நிரல்படுத்தலில் முதலாவது இடத்தினை மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையும் இரண்டாவது இடத்தினை மட்/பட்/கோவில்போரதீவு விவேகானந்த மகா வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை மட்/பட்/மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டுக்கான பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் அனைத்து விளையாட்டுக்களுக்குமான புள்ளிகளடிப்படையிலான தரநிலைப்படுத்தலில் முதலாவது இடத்தினை மட்/பட்/ களுதாவளை மகா வித்தியாலயமும் ( தேசிய பாடசாலை) இரண்டாமிடத்தினை மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை மட்/பட் / மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.
இவ் விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டது.











Comments