10 வது பாடுமீன்களின் சவால் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சன்ட் தேசிய பாடசாலை........

 10 வது பாடுமீன்களின் சவால் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சன்ட்  தேசிய பாடசாலை........

மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலைகளான மட்/வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலைக்கும் மட்/புனித சிசிலியா பெண்கள் உயர்தர பாடசாலைக்கும் இடையிலான 10வது பாடுமீன்களின் கிரிக்கெட் சமர்  இன்றைய தினம் (11) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 10வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட பாடுமீன்களின் சமர் என்கின்ற நாமத்துடனான இவ் கிரிக்கெட் சமர் இரு அணி ரசிகர்களின் பலத்த ஆதரவின் மத்தியில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இடம்பெற்றது.

20 ஓவர்கள் மட்டுப்படுத்தட்ட இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட்/வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை அணித்தலைவி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்  நிறைவில் 4 விக்கட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர் துடுப்பாட்டத்தில் வின்சன்ட் பாடசாலை அணி சார்பாக தனுஜா அவர்கள் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை தனது அணிக்காக சேகரித்து கொடுத்து தனது திறமையினை நிருபித்திருந்தார்.

வின்சன்ட் பாடசாலை அணி நிர்ணயித்த  156 என்கின்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா பாடசாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.

பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இறுதிப்பந்துக்கு 4 ஓட்டங்களை பெற்றால் சிசிலியா பாடசாலை அணி வெற்றி வாகை சூடும் என்ற பரபரப்பான நிலைக்கு நகர்ந்திருந்த இப்போட்டியில், இறுதிப்பந்தில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 ஓட்டங்களால் திரில் வெற்றியினை பெற்றுக்கொண்டு 10 வது பாடுமீன் கின்னத்தை தனதாக்கி கொண்ட வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை அணி . 







Comments