முனைக்காடு கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான திறன் பலகை (Smart Board) வழங்கி வைப்பு....
முனைக்காடு கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான திறன் பலகை (Smart Board) வழங்கி வைப்பு....
முனைக்காட்டை சேர்ந்த பொறியியலாளர் ராஜன் அவர்களினால் முனைக்காடு கிராமத்திலுள்ள சூபாடசாலைகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான திறன் பலகை (Smart Board) நன்கொடையாக வழங்கி வைக்கப்ட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முனைக்காடு கிராமத்திலே இருக்கின்ற மட்/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம், மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான திறன் பலகை (Smart Board)கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் பொறியியலாளர் ராஜன் அவர்கள் அண்மையில் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த போது அவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.
அத்துடன் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் விதத்தில் பயன்படுத்தப்படுகின்ற இவ் திறன் பலகை (Smart Board) களை கையாள்வது தொடர்பிலான கருத்தரங்கும் ராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
Comments
Post a Comment