பன்சேனை பாரி வசம் VMD Trophy: மட்டுவில் தனக்கென ஒரு நாமத்தை மீண்டும் பதிவிட்ட VMD நிறுவனம்......

 பன்சேனை பாரி வசம் VMD Trophy: மட்டுவில் தனக்கென ஒரு நாமத்தை மீண்டும் பதிவிட்ட VMD நிறுவனம்......

மட்டக்களப்பில் இது வரை யாரும் நடாத்தி முடிக்காத ஒரு பாடசாலை மட்டத்திலான பெண்கள் உதைபந்தாட்ட போட்டியை நடாத்தி மட்டக்களப்பில் தமக்கென இருக்கும் நமத்தை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளனர் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தினர்.

மட்டக்களப்பு 04 கல்வி வலயங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளை ஒன்றினைத்து 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட போட்டி ஜுலை 1ம் 2ம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வேல்முருகன் ஒஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தால் நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் பன்சேனை பாரி வித்தியாலயம் மிகச்சிறப்பாக தம் திறமையை வெளிக்கொணர்ந்து முதலாமிடத்தை பெற்று VMD கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. இரண்டமிடத்தை முனைக்காடு விவேகானந்தா பாடசாலை பெற்றுக் கொள்ள, மூன்றாம் நான்காம் இடங்களை முறையே கட்டுமுறிவுக்குளம் GTMS பாடசாலையும், அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன.

இப்பேபட்டியில் முறையே முதலாமிடத்தை பெற்ற அணிக்கு 100000 ரூபாய்  பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், வெற்றிக்கிண்ணமும், பதக்கங்களும் வழங்கப்பட, இரண்டமிடத்தை பெற்ற அணிக்கு 75000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், வெற்றிக்கிண்ணமும், பதக்கங்களும் வழங்கப்பட, மூன்றாமிடத்தை பெற்ற அணிக்கு 50000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும், வெற்றிக்கிண்ணமும், பதக்கங்களும் வழங்கப்பட, நான்காமிடத்தை பெற்ற அணிக்கு 25000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட மற்றைய 08 அணிகளுக்கும் தலா 10000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீராங்கனைகளுக்கான விருதும், பணப்பரிசிலும், சிறந்த கோல் காப்பாளர், அதிக கோல்கள் புகுத்திய வீராங்கனை மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான பரிசில்களும், பணப்பரிசிலும் வழங்கி வைப்பட்டன.

 சிறந்த கோல்காப்பாளருக்கான விருதினை முனைக்காடு விவேகானந்தா மாணவி R.பிரியதர்சா பெற்றுச் செல்ல, அதிக கோல்கள் மொத்தம் 16 கோல்கள், ஒரு போட்டியில் 06 கோல்கள் புகுத்திய கட்டுமுறிவுக்குள பாடசாலை மாணவி N.நந்தினி பெற்றுச் செல்ல, இவருக்கு விசேட பரிசாக ஒரு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும், தொடர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக பன்சேனை பாரி வித்தியாலய மாணவி S.ருகாநிதா பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில் பல சம்பவங்கள் மனதை தொட்டவையாக இருந்தன தம்பலவத்தை கணேசா வித்தியாலய மாணவிகள் பாதணிகள் இல்லாமல் களம் புகுந்ததை அவதானித்த VMD நிறுவன பங்குதாரர் காசிப்பிள்ளை சதீஸன் உடனடியாக அம்மாணவர்களுக்காக பாதணி கொள்வணவு செய்ய 50000 ரூபாய் வழங்கி, அம்மாணவிகள் மறு நாள் பாதணியுடன் விளையாடியது நெஞ்சை நெகிழ வைத்த சம்பவமாக இருந்தது.

 அத்துடன் வருகை தந்த பாடசாலை வீராங்கனை மற்றும் அவர்களது குழுவிற்கு இரு நாட்களும் காலை மற்றும் மதிய உணவுகள், வீராங்கனைகளுக்கான விசேட உணவுகள் வழங்கப்ட்டதுடன், தூர இடங்களில் இருந்து வருகை தந்த ஒரு சில பாடசாலைகளுக்கு போக்குவரத்து கொடுப்பணவும் வழங்கப்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொண்டு அனைத்து பாடசாலை குழுமத்தையும் ஒன்றினைத்து புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களுக்கு உடனடியாகவும் வழங்கி சாதனை படைத்திருந்தனர் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தினர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா கல்வி வலயங்களின் உடற்கல்வி உதவி பணிப்பாளர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழக மற்றும் கிராம அங்கத்தவர்களும் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தின் அங்கத்தவர்களும் வருகை தந்திருந்தனர்.

எது எப்படியோ இவ் மாபெரும் பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியை வெற்றியுடன் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நடாத்தி முடித்திருந்தாலும், இதற்கு பின்னால் பல  வேதனையான சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டிருந்தது, அதையும் தாண்டி வெற்றி கொடியை மட்டக்களப்பில் நட்டு விட்டார்கள வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தினர். அடுத்த தொடர் நடைபெறுமா?

























Comments