வெற்றிகரமான தொடக்கத்தை ஆரம்பித்த Trophy of VMD..........
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும் எனும் தூர நோக்கு சிந்தனையில் மட்டக்களப்பில் இன்று (01) ஆரம்பிக்கப்பட்ட Trophy of VMD பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இன்றைய முதல் போட்டியில் 08 அணிகள் வெளியேற்றப்பட்டு 08 இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளன. இதில் வெளியேறிய அணிகளாக
- 1. மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் பாடசாலை
- 2. பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்
- 3. மட்டக்களப்பு மஹாஜனா கல்லூரி
- 4. பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
- 5. மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயம்
- 6. மண்டுர் 14 சக்தி மகா வித்தியாலம்
- 7. தன்னாமுனை ஜோசப் கல்லூரி
- 8. வம்மிவட்டுவான் வித்தியாலம்
என்பன வெறியேற்றபட்ட அணியாகவும், இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிய அணியாக
- 1. பன்னேனை பாரி வித்தியாலயம்
- 2. முணைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலயம்
- 3. பாற்சேனை மகா வித்தியாலயம்
- 4. அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம்
- 5. கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலம்
- 6. நாப்பதாம்வட்டை விபுலானந்தா வித்தியாலம்
- 7. கட்டுமுறிவுகுளம் அரசினர் தமிழ் மகா வித்தியாலம்
- 8. தம்பலவத்தை கனேசா வித்தியாலம்
என்பன் இரண்டாம் சுற்றுக்காக வெற்றி பெற்ற அணிகளாகும்.
இன்றைய நாளில் 2ம் சுற்றுக்கு தெரிவாகாத அணிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உதைபந்தாட்ட உபகரணங்களும், இப்போட்டியில் பங்குபற்றியதற்கான நினைவு புகைப்படமும் வழங்கி வைக்கப்பட்டதுடன். நடைபெற்ற ஒவ்வொரு போட்டிகளுக்குமான சிறந்த வீராங்கனைகளுக்கான நினைவு சின்னமும், பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய முதல் நாள் நிகழ்வில் கல்குடா வலய உடற்கல்வி உதவி பணிப்பாளர் திரு.ரமேஸ் அவர்களும், மட்டக்களப்பு மேற்கு வலய உடற்கல்வி பணிப்பாளர் திரு.சந்திரகுமார் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா, உப தலைவர் ச.தங்கராஜா, கோட்டைமுனை கிராம பணிப்பாளர்களான செ.ரஞ்சன், ஏ.சிவநாதன் மற்றும் வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான ச.காசிப்பிள்ளை, கா.சதீஸன், கா.வித்தியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment