மட்டக்களப்பில் N.V.Q சான்றிதழ் வழங்குவதற்கான செயலமர்வு......
மட்டக்களப்பில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகளுக்கான, N.V.Q தர தொழில் தகைமை சான்றிதழ் வழங்குவதற்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இடம்பெற்றது.
மாவட்ட செயலக திறன் விருத்தி பிரிவின் ஏற்பாட்டில், பெரண்டினா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செயலமர்வு நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் A.நவேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில், மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் செந்தூரன் வளவாளராக கலந்து கொண்டார்.
பெரண்டினா நிறுவன பிரதி பொது முகாமையாளர் ரஹீம் மொகமட், நிறுவன மாவட்ட இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளர் தினேஷ், மாவட்டச் செயலக மாவட்ட திறன் விருத்தி இணைப்பாளர் சிவகுமார் மற்றும் தொழில் பயிற்சி நிறுவன பிரதிநிதிகள் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment