சாரங்கா பவுண்டேனால் KSC வீரர்களுக்கான பயிற்சி சீருடை வழங்கி வைக்கப்பட்டது.....
மட்டக்களப்பின் முன்னாள் பாடசாலை அதிபர்களில் ஒருவராகி விளங்கிய ஐயாத்துரை சாரங்கப்பாணி அவர்களில் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சாரங்கா பவுண்டேசனின் சார்பாக மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர்களுக்கான பயிற்சி சீருடை (09) அன்று கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணித்தலைவர் சாருகனிடம் அவர்களின் குடும்பம் சார்பாக கையளிக்கப்பட்டது.
இந்நிகசழ்வில் மதிப்பிற்குரிய ஐயாத்துரை சாரங்கப்பாணி அதிபர் அவர்களின் அன்புத்துணைவியாரான மகேஸ்வரி சாரங்கப்பாணி அவர்களும் அவர்களின் அன்பு புதல்வர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும். இச்சீருடைக்கான அன்பளிப்பை இங்கிலாந்தில் வசிக்கும் அருள்மொழி ஜெயவர்மன் அவர்களால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும் இவர் ஒருகோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment