COOP கைலைநாதனுக்கு மட்டக்களப்பில் சிறப்பு வரவேற்பு......
யாழ்ப்பாணத்தில் தொடங்கி யாழ்ப்பாணத்தில் முடிவடையும் 12 நாட்கள் கரையோர பிரதேசங்கள் ஊடாக சைக்கிள் பவணியை தொடங்கியுள்ள வைத்தியலிங்கம் கைலைநாதனுக்கு மட்டக்களப்பில் வைத்து (03) அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அளவெட்டியில் இருந்து 01ம் திகதி தொடங்கப்பட்ட இவரின் பயணம் வவுனியா, திருகோணமலை சென்று இன்று (03) மட்டக்களப்பு வந்தடைந்துள்ளார். இவருக்கான சிறப்பு வரவேற்பை வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களாலும், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளரும், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருமான நடராஜா சிவலிங்கம் அவர்களாலும், கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கிராமம் சார்பாகவும், மட்டக்களப்பு சுட்டுறவு சங்கங்களிலாலும் வரவேற்கப்பட்டார்.
101வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு கூட்டுறவில் விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரான வைத்தியலிங்கம் கைலைநாதன் 12 நாட்களில் யாழ்ப்பாணம் தொடங்கி யாழ்ப்பாணம் வரை சைக்கிள் சவரியை தொடங்கி இருந்தார். இவர் தன் 16 வயதில் 1971ல் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள சென்ற போது இவள்க்கு வயது குறைவாக இருப்பதால் இணைத்துக் கொள்ளப்படவில்லை, இதிலிருந்து இந்த சைக்கில் ஓட்டத்தை ஒரு சாதனை நிகழ்வாக தன் வாழ்நாளில் எடுத்துக் கொண்டு இன்று பல்வேறு பட்ட இடங்களுக்கு சைக்கில் சவாரி செய்து சாதனை புரியும் ஒரு 68 வயதான வீரர் ஆவார்.
நாளை (04) பொத்துவில்லை நோக்கிய இவரது பயணம் தொடர்ந்து கதிர்காமம் ஊடாக தொடர இருக்கின்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் K.V.தங்கவேல் அவர்களும், கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பணிப்பாளர்களான S.ரஞ்சன், E.சிவநாதன், S.காசிப்பிள்ளை ஆகியோருடன் பொருளாளர் K.தயாசிங்கம் அங்கத்தவர்களான பீட்ஜோசப் மற்றும் S.தேவராஜன் ஆகியோருடன் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து வரவேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment