காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி : சென் பற்றிக்ஸ் கல்லூரி வெற்றி.......
யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் மற்றும் இலண்டன் தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் அனுசரணையில் மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட 20 வயதுப் பிரிவினருக்கான காற்பந்தாட்டப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி, இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி அணியை 02 : 01 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இக் காற்பந்தாட்ட தொடரின் சிறந்த காற்பந்தாட்ட ஆட்ட வீரராக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணியின் இணைத் தலைவர் ஜெறோம் தெரிவு செய்யப்பட்டார்.
இக் காற்பந்தாட்ட போட்டியில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்ளையும் வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கி சிறப்பித்தார்.
Comments
Post a Comment