விளையாட்டு துறை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு.....
விளையாட்டுத்துறை அமைச்சுடன் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து நடத்தும், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (25) மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்மராஜா தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில், இணைப்பாளர் எம்.வை.ஆதாம் லெப்பை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் ஐந்து நாள் இடம் பெறுன்ற திறன் அபிவிருத்தி பயிற்சி செயலமர்வில், விளையாட்டுத்துறை சார் உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்
Comments
Post a Comment