மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது......

 மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது......

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாபெரும் தொழில் சந்தை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் மைக்கல் கொலின் ஒருங்கிணைப்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில், இடம் பெற்ற தொழில் சந்தையில் தொழில் வாய்ப்பின்றி காணப்படுபவர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் தரமுயர்த்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள், 20இற்கு மேற்பட்ட தனியார் துறையினர் என பல நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழி வாய்ப்பினை வழங்கும் வகையில் நேர்முக தேர்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில், மாவட்ட செயலக மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கருணாகரன் மற்றும் சுகிர்தராஜா, மண்முனை வடக்கு மனித வலு உத்தியோகத்தர்களான தெய்வேந்திரகுமாரி, மகேசன் உட்பட தொழில் வழங்கும் அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments