புனித மிக்கல் கல்லூரி இந்துக்கல்லூரி இணைச்சம்பியன்; இந்துக்கல்லுரியும் சம்பியன் ............
மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலையின் 150 வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பில் உள்ள பிரபல 04 பாடசாலைகளான, புனித மிக்கல் கல்லூரி, இந்துக்கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் சிவானந்தா பாடசாலைகளை இணைந்து T/10 கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, இதில் 35 வயதுக்கு மேற்பட்ட அணி மற்றும் 35 வயதுக்கு உட்பட்ட அணி என இரு பிரிவு அணிகள் மோதிக் கொண்டன.
கடந்த 29 மற்றும் 30ம் திகதிகளில் மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன், 35 வயதுக்கு உட்பட்ட பிரிவில் புனித மிக்கல் கல்லூரியினுடன் இணைச்சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டது. முதல் தடவையாக இந்த 04 பாடசாலைகளையும் இணைந்து தமது 150 வது வருடத்தினை கொண்டாடும் வகையில் இப்போட்டியை புனித மிக்கேல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment