கல்குடா முதல் காத்தான்குடி வரை போதைப் பொருளுக்கு எதிராக மோட்டார் வாகன பேரணி......
'போதையற்ற கல்குடா' அமைப்பினால் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரை 'போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் போதை வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம்' எனும் தொனிப் பொருளிலில் மோட்டார் வாகன பேரணி (15) இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்குடா வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக பேரணி ஆரம்பமாகியது. பேரணியினை வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜெமில் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
பேரணியில் பங்குபற்றியவர்கள் தேசியக் கொடியினை ஏந்தியவாறு வாழைச்சேனை, காவத்தமுனை, செம்மன்னோடை போன்ற பிரதேசங்களுக்கு ஊர்வலமாகச் சென்று அங்கிருந்து ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி வரையும் பயணித்தனர்.
மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் போதைப் பொருளின் பாவனையை கட்டுப்படுத்தி தருமாறு தெரிவித்து பேரணியில் பங்குகொண்டவர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment