பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு சிசிலியா மாணவிகள்.....

 பொதுமக்களை வியப்பில் ஆழ்த்திய மட்டக்களப்பு சிசிலியா மாணவிகள்.....

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற விஞ்ஞானக் கண்காட்சியின் இரண்டாம் நாளில், பெருமளவான மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
பாடசாலை அதிபர் நிதாஞ்சலி தலைமையில் விஞ்ஞானக் கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமானது. கண்காட்சியின் ஆரம்ப நாளில் பாடசாலை மாணவர்கள் மாத்திரம் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்று (29) பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. பெருமளவான மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு, காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சிப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.
இரண்டாம் நாள் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக அருட்தந்தையர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவ சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.










Comments