மட்டுவில் புதிதாக அமைக்கப்படும் பொது நூலகத்தை பார்வையிட்ட கிழக்கு மாகாண ஆளுனர்.....
மட்டக்களப்பில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்திலேயே மிகப் பெரிய நூலகத்தின் கட்டுமான பணிகளையும், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், பொது நூலகத்தையும் பார்வையிட்டார் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோருடன் பார்வையிட்டார்.
இப்பொது நூலகமானது கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment