ஓய்வை அறிவித்தார் பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்...........
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஏஷஸ் கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் தொடரை அடுத்து, தாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று ஜூலை 29 லண்டனில் உள்ள கியா ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் விளையாட்டிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
நான் கிரிக்கெட்டை எப்போதும் போலவே நேசிக்கிறேன், இது ஒரு அற்புதமான தொடராகும், மேலும் நான் எப்போதும் முதலிடத்தில் இருக்க விரும்புகிறேன். 'இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் அருமையாகவும், பொழுதுபோக்காகவும் இருந்ததினை போல் உணர்கின்றேன்' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment