கல்லடியில் கனவு மெய்ப்படுகின்றது எனும் தலைப்பில் செயலமர்வு....
கனவு மெய்ப்படுகின்றது எனும் தலைப்பிலான ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் (30) நடைபெற்றது. பெண்கள் மேம்பாட்டு அமையம் மற்றும் கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் அனுசரணையோடு கனவு மெய்ப்படுகின்றது அமைப்பின் தாபகர் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரெட்ணராஜா ஒருங்கிணைப்பில் செயலமர்வு இடம்பெற்றது.
செயலமர்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் A.நவேஸ்வரன் கலந்து கொண்டதுடன், முதன்மை பேச்சாளராக கிழக்குபல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவருமான கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரன் கலந்து கொண்டு சிந்தனைகளை மாற்று உன் வாழ்க்கை மாறும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார். நிகழ்வில் மதத்தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள், இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment