மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபை தெரிவும்....

மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபை தெரிவும்....

 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகசபை தெரிவும் (08) இடம்பெற்றது.

கல்லூரியின் கார்ட்மன் மண்டபத்தில் அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இவ் வருடாந்த பொதுக்கூட்டத்தில் செயலாளர் ஆர்.கஜாந்தன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது தொடர்ந்து, தலைவர் எஸ்.பகீரதன் அவர்களால் கடந்த நிர்வாகசபையினால் ஆற்றப்பட்ட பணிகள், அடைவுகள் மற்றும் எதிர்நோக்கிய சவால்கள் என்பன பற்றி அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பொருளாளர் டி. ஜேர்சன் அவர்களால் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய நிர்வாக சபையின் தலைவராகப் பொறியியலாளர் மயூரன் அவர்களும், பொதுச்செயலாளராக திபேஸ்கர் அவர்களும், பொருளாளராக டொமினிக் ஜயதிலக அவர்களும், உபதலைவர்களாக உதயரூபன் மற்றும் சுபாகாந்தன் ஆகியோரும், 13 நிர்வாகசபை அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் போது புதிய அங்கத்தவர்கள் பலர் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொண்டதுடன், 210 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சின்னங்களைத் தாங்கிய பல்வேறு நினைவுப் பொருட்களின் விற்பனையும் இடம்பெற்றது.










Comments