என்.செல்வராஜாவின் யாழ். பொது நூலகம் பற்றிய இரு நூல்கள் வெளியீடு....
இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என்.செல்வராஜாவின் யாழ்ப்பாணம் பொது நூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட'Rising from the Ashes' என்ற ஆங்கில நூல், 'யாழ்ப்பாண பொது நூலகம்' என்கிற தமிழ் நூல் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா (18) யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். பொதுசன நூலகத்தின் பிரதம நூலகரான அனுசியா சிவகரன் வரவேற்புரை ஆற்றினார். அடுத்து, எங்கட புத்தகங்கள் நிறுவனர் குலசிங்கம் வசீகரனின் வெளியீட்டுரையை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.
இந்த இரண்டு நூல்களின் முதல் பிரதிகளையும் இரு நூல்களின் ஆசிரியரான என்.செல்வராஜா வெளியிட்டுவைக்க, கல்வியியலாளரும் எழுத்தாளருமான நடராஜா அனந்தராஜ் பெற்றுக்கொண்டார்.
'Rising from the Ashes'நூல் பற்றிய கருத்துரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார். அடுத்து, 'யாழ் பொதுநூலகம்' நூல் தொடர்பிலான கருத்துரையினை சற்குணம் சத்தியதேவன் ஆற்றினார். அதனையடுத்து, நூலாசிரியர் என்.செல்வராஜா கௌரவிக்கப்பட்டதோடு, அவரது ஏற்புரை இடம்பெற்றது.
நிறைவாக, யாழ். பொதுசன நூலகத்தின் உதவி நூலகரான அனிதா தயாளன் நன்றியுரை வழங்கியதோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Comments
Post a Comment