தமிழில் பல்துறை முன்னோடி ; சுவாமி விபுலாநந்தர் நினைவு பேருரை.....

 தமிழில் பல்துறை முன்னோடி ; சுவாமி விபுலாநந்தர் நினைவு பேருரை.....

சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு "தமிழில் பல்துறை முன்னோடி:சுவாமி விபுலாநந்தர்" என்னும் தலைப்பில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நினைவு பேருரை (23) மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இதன் போது "தமிழில் பல்துறை முன்னோடி:சுவாமி விபுலாநந்தர்"என்னும் தலைப்பில் பேராசிரியர் செ. யோகராஜா அவர்களால் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. இன்று (2023.07.23) நினைவு பேருரை 82, அரசாங்க விடுதி வீதி, கல்லடி, மட்டக்களப்பு என்னும் முகவரியில் அமைந்த மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது. இது மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் முதலாவது நினைவுப் பேருரை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆன்மிக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் சுவாமி சுரார்சிதானந்தர் அவர்களும், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எத்திரி.ந.சிவலிங்கம் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக் காப்பாளர் மு. பவளகாந்தன் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபைத் தலைவர் க.பாஸ்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 இது மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் முதலாவது நினைவுப் பேருரை என்பது குறிப்பிடத்தக்கது.













Comments