கல்குடா கல்வி வலயத்தில் விளையாட்டு போட்டி.......

 கல்குடா கல்வி வலயத்தில் விளையாட்டு போட்டி.......

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி விழா இடம்பெற்றது. கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் அனந்தரூபன் தலைமையில் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி விழா ஆரம்பமாகி நடைபெற்றது.

மைதான நிகழ்வுகள், உடற்பயிற்சி கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் விளையாட்டு விழாவை அலங்கரித்தன. நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர், சந்திவெளி பொலிஸ் நிலைய அதிகாரி, கல்குடா வலய கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வலய மட்ட விளையாட்டு விழாவில் புள்ளி அடிப்படையில் முதல் நிலையிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கான வெற்றி கிண்ணங்கள் வலய கல்வி பணிப்பாளரால் வழங்கி வைக்கப்பட்டது.


Comments