காத்தான்குடியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி.......

காத்தான்குடியில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சி.......

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக வளாகத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான, பிரதேச மட்டத்திலான சிறு விற்பணைக் கண்காட்சி (25) இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைய காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

விற்பணைக் கண்காட்சியினை காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments