கட்டுமுறிவு பாடசாலையின் மற்றுமொரு சாதனையே குளத்தை நீச்சல் தடாகமாக்கி சாதனையை பதிவிட்டது......

கட்டுமுறிவு பாடசாலையின் மற்றுமொரு சாதனையே குளத்தை நீச்சல் தடாகமாக்கி சாதனையை பதிவிட்டது......

வாகரை, கட்டுமுறிவுக்குளத்தில் குளித்து நீச்சல் பழகியவர்கள், இன்று மாகாண மட்டம் வரை  நீச்சல் போட்டிக்காக சென்ற  சாதனை மாணவர்களின் கதையே இது.

வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓர் கிராமமே கட்டுமுறிவுக்குளம் ஆகும். இக்கிராமம் வாகரை பிரதான வீதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பாதயை சொல்லவே வேண்டாம் பாரிய குழிகள், பள்ளங்கள் யாருக்கும் போவதற்கே அஞ்சப்படும் ஒரு கிராமம், யானைத் தொல்லை இப்படியான கிராமத்தில் இப்படி சாதனை படைக்கும் மாணவர்களா வியப்பாக இருக்கின்றதா?

 ஆம் இக்கிராமத்தில் இயங்கும் ஒரு பாடசாலை தான் கட்டுமுறிவுக்குளம் அ.த.க பாடசாலை. முழுக்க நகரத்தில் இருந்து மாற்றமடைந்து இயற்கை வனப்பால் சூழுப்பட்ட கிராமத்தில் அமைந்துள்ளது தான் இந்த பாடசாலை. இப்பாடசாலையின் வரலாறு கடந்த காலங்களில் உதைபந்தாட்டத்தால் இலங்கை பூராகவும் பேசப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு அப்பாடசாலை மாணவர்கள் அதிலும் பெண்கள் சாதனை வீரர்களாக திகழ்ந்தார்கள், திகழ்ந்து கொண்டும் இருக்கின்றார்.

இதை விட மற்றுமொரு சாதனையையும் செய்து காட்டி இருகின்றார்கள் கட்டுமுறிவுக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்  பொழுது போக்கிற்காக மாலை நேரங்களில் இங்குள்ள மாணவர்கள் கட்டுமுறிவுக்குளம், ஆண்டான்குளம் ஆகிய இரு குளங்களில் நீந்தி பழகி வந்துள்ளனர். இவர்களின் அசுர திறமையை கண்ட பாடசாலையின் அதிபர் இவர்களை பயிற்றுவித்து நீச்சல் போட்டிகளுக்கு கொண்டு சென்றால் என்ன என்று பெற்றோரிடம் வினவினார்.  இதற்கு சம்மதம் கிடைக்வே, அக்குளத்திலேயே தங்கள் பிள்ளை செல்வங்களை பயிற்சியில் ஈடுபடுத்தி இன்று மாகாண மட்டம் வரை கொண்டு சென்ற சம்பவம் போட்டிக்கு எதுவும் தடை இல்லை என்பதை உணர்த்தி நிற்கின்றது.

நீச்சல் தடாகம் இல்லை, பயிற்றுவிப்பாளர் இல்லை, பாவிக்கும் பொருட்கள் இல்லை மனதில் தைரியம், விடாமுயற்சி போதும் வெற்றியை பறித்துக் கொள்ள என்பதற்கு அம்மாணவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. 

 கல்குடா கல்வி வலயத்தில் எந்த ஒரு பாடசாலையிலும் நீச்சல் தடாகம் இல்லை, எந்த மாணவர்களும் இது வரை நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளவும் இல்லை. 

 ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் குளத்தில் பயிற்சி செய்து இன்றைய தினம் அம்பாறையில் நடந்த மாகாணங்களுக்கிடையிலான நீச்சல் போட்டியில் கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் இவ்வாறான நிலைக்கு இம் மாணவர்களை நல்வழிப்படுத்திய  பாடசாலையின் அதிபர் ஜீவரெத்தினம் ஜீவனேஸ்வரன் மற்றும் பாடசாலை சமூகத்தின் உத்வேகமும் அவர்களின் விடாமுயற்சியும் பாராட்டத்தக்கது எனலாம்.



Comments